This is the "அமலதாசன்" page of the "சிங்கப்பூர் எழுத்தாளர்கள்-1" guide.
Alternate Page for Screenreader Users
Skip to Page Navigation
Skip to Page Content

சிங்கப்பூர் எழுத்தாளர்கள்-1   Tags: tamil, சிங்கப்பூர்த்_தமிழ்_இலக்கியம், தமிழ்  

Short write up of Tamil writers
Last Updated: Feb 23, 2012 URL: http://libguides.nl.sg/singapore_tamil_literature_writers Print Guide RSS UpdatesShareThis

அமலதாசன் Print Page
  Search: 
 
 
 

கவிஞரேறு அமலதாசன்.

 கவிஞரேறு அமலதாசன்.

மலேசியா கோசிலாங்கூர் மாவட்டத்தில் 1939ஆம் ஆண்டு பிறந்த திரு அமலதாசன், நெகிரி செம்பிலான் டீச்சர்ஸ் யூனியன்- ரீஜண்ட் இன்ஸ்டிடியூஷன் பள்ளிகளில் தொடர்ந்து எல். சி. இ. வகுப்பு வரை கற்றபின் ஓராண்டு நான்காம் படிவத்தில் சேர்ந்து படித்தார்.

இலக்கியம் படைப்பதோடு சமுதாயப் பணிகளையும் செய்து வருகிறார். பல இலக்கிய, சமூக அமைப்புகளில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

1987-2005 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். 2005ஆம் ஆண்டு முதல் அக்கழகத்தின் மதியுரைஞராகப் பொறுப்பு வகிக்கிறார்.

லக்கியப் பணி

1958ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் திரு அமலதாசன், முதலில் தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில்தான் எழுத ஆரம்பித்தார். நாடு, மொழி, சமுதாயம், இயற்கை, காதல், தத்துவம், என்று பல்வேறு தலைப்புகளில், இசைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், மரபுக் கவிதைகள் என 1500க்கும் மேற்பட்ட கவிதைகளை இயற்றியுள்ளார். சிங்கை, மலேசியா, தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஏடுகளிலும், வானொலி, தொலைக்காட்சியிலும் அவர்தம் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூர், மலேசியா, தமிழ் நாடு, மொரிசியஸ் போன்ற நாடுகளில் பல்வேறு இலக்கிய மாநாடுகளில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றியுள்ளார். கவிவாணர் ஐ. உலகநாதன் அவர்களின் வழியைப் பின்பற்றி நடப்பவர். பல்வேறு இலக்கிய சமூக அமைப்புகளில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

பாராட்டுகள்/விருதுகள்

1975இல் தேசிய அரங்கக் காப்புக் குழுவும், சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகமும் கூட்டாக நடத்திய நான்கு மொழிகளுக்கான பாடல் இயற்றும் போட்டியில் `அலைபாடும் கடலும்' எனத் தொடங்கும் பாடல் சிறப்புக்குரியதாகத் தேர்வுபெற்றது. சிங்கப்பூர், மலேசிய நாடுகளின் அமைப்புகள், நாளிதழ்கள் நடத்திய போட்டிகளில் பல சிறப்புப் பரிசுகளை வென்றுள்ளார்.
 
கவிஞரின் இலக்கியத் தொண்டினைப் பாராட்டி 1989இல் மலேசியப் பொன் பாவலர் மன்றம் `கவிஞரேறு அமலதாசன்' எனும் பட்டத்துடன் பொற்பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தது.

வெளியிட்டுள்ள நூல்கள்
புல்லாங்குழல், தமிழர் தலைவர் தமிழவேள் கவிதைகள் ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார்.


புல்லாங்குழல் : இசைப் பாடல்கள்
சிங்கப்பூர் : [சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்], 2004.
RSING 894.811172 AMA

தமிழர் தலைவர் தமிழவேள் கவிதைகள்
சிங்கப்பூர் : [சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்], 2004.
RSING 894.811172 AMA

 

Subject Guide

Profile Image
Sundari Balasubramaniam
 
Description

Loading  Loading...

Tip